செய்திகள்

கிளிநொச்சி- கோணாவில்- அக்கராயன்குளம் – வன்னேரிக்குளம் பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் மக்கள் அவதி

கிளிநொச்சி கோணாவில், அக்கராயன்குளம் வன்னேரிக்குளம், ஜெயபுரம் ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதிகள் புனரமைக்கப்படாமையினால் சுமார் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அன்றாடத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதிலும் போக்குவரத்து செய்;ய முடியாமலும் சொல்லணத்;துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மேற்குறித்த கிராமங்களுக்கான பிரதான வீதியாகக் காணப்படும் கிளிநொச்சி கோணாவில் அக்கராயன்குளம் வன்னேரிக்குளம் ஜெயபுரம் வீதியானது எந்தவித புனரமைப்புக்களும் இன்றி பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதனால் இவ்வீதியூடாக மக்கள் போக்குவரத்துச் செய்யமுடியாது நிலையில் காணப்படுகின்றது.

இவ்வாறு குறித்த வீதி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதனால் வன்னேரிக்குளத்தில் ஆயிரத்து 694 பேரும் ஆனைவிழுந்தான் கிராமத்தில் ஆயிரத்து 359 பேரும் கந்தபுரம் கிராமத்தில் இரண்டாயிரத்து 831 பேரும் அக்கராயன்குளம் கிராமத்தில் இரண்டாயிரத்து 553 பேரும் கோணாவில் கிராமத்தில் நான்காயிரத்து 355 பேரும் என மேற்குறித்த கிராமங்களில் பதினேழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் குறித்த வீதியை பயன்படுத்தும் பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த முட்கொம்பன், ஜெயபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் வாழும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் பயன்படுத்தும் குறித்த வீதியை புனரமைத்து இப்பகுதி மக்கள்கோரிக்கை விடுத்துள்;ளதுடன் குறித்த கிராமங்களில் எதுவித அடிப்படை வசதிகள் இன்மையால் கிளிநொச்சி அல்லது வேறு இடங்களுக்கே செல்லவேண்டிய நிலையில் இவ்வீதியையே பயன்படுத்த வேண்டியுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.