செய்திகள்

கிளிநொச்சி சிவபாத கலையக அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிவபாத கலையக்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்;படும் என சிறுவர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த 1983ம் ஆண்டு மாலையகப்பகுதியில் இடம்பெற்ற வன்செயல்;கள் காரணமாக இடம்பெயந்த மக்கள் குடியேறிய கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் அமைக்கப்பட்ட சிவபாத கலையகம் வித்தியாலகத்தின் தற்;போது 400 இற்கும் மேற்பட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் குறித்த பாடசாலையில் போதிய தளபாட வசதிகள் இல்லாத நிலையில் 195 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தளபாட வசதிகள் இன்றி நிலத்தில் இருந்து கல்வி கற்று வருகின்றனர்.

அத்துடன் போதிய வகுப்பறை வசதிகள் இன்மை கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றிக் காணப்படுகின்றது.

இவ்வாறான வசதிகள் ஏற்படுத்தித் தருமாறு இப்பாடசாலை மாணவர்;களின் பெற்றோர்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தபோதும் அந்த வசதிகளையும் ஏற்படுத்தித்தரவில்லை என தெரிவித்து இப்பகுதி பெற்றோர்கள் சிறுவர்; விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களிடம் விடுத்த கோரிக்கையைடுத்து நேற்று (04-04-2016) பகல் சிவபாத கலையகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள் பாடசாலையின் நிலமைகள் தொடர்பாக ஆராயந்ததுடன் அதிபர் மற்றும் பெற்றோரர்களிடம் கலந்துரையாடியதுடன் குறித்த பாடசாலையானது மத்திய அரசின் கீழ் இல்லை. மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ளதனால் இப்பாடசாலையின் வளப்பற்றாக்குறை தொடர்பாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அத்துடன் வசதியீனங்;களை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.