செய்திகள்

கிளிநொச்சி பகுதிகளில் உவர் நிலமாக மாறிவரும் விவசாய நிலங்கள்: குடிநீருக்கும் பிரச்சினை

விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறிவருவதுடன் குஞ்சுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வசதியின்மையாலும் பெருமளவான குடும்பங்கள் குடிபெயர்ந்து வருகின்றனர்.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளில் பெருமளவான விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறிவருவதுடன் குஞ்சுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வசதியின்மையாலும் பெருமளவான குடும்பங்கள் குடிபெயர்ந்து வருகின்றனர்.

கிளிநொச்சி பூநகரி மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோரப்பகுதிகளில் காணப்பட்ட உவர்நீர் தடுப்பணைகள் கடந்த காலயுத்தம் காரணமாக சேதமடைந்;தமை மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கடல்நீர் தடுப்பணைகள் அமைக்கப்படாமை என்பவற்றால் பெருமளவான விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருகின்றன. தற்போது விவசாய நிலங்கள் உவர்நிலங்களாக மாறி வருகின்றன. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் ஐயாயிரம் ஏக்கர் வரையான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் குளம் ஆகிய பகுதிகளிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பருவமழை காலங்களில் பெய்து வரும் மழை நீரின் மேலதிக நீரானது முடக்கன் ஆற்றினூடாக மண்டைக்கல்லாற்றுக்குச் சென்று அதனூடாக பூநகரி கடலைச் சென்றடைகின்றது.

இதேவேளை கடலின் உயர் பெருக்கு காலங்களில் கடல்நீர் ஆற்;றின் பாதைவழியாக உட்புகுவதனாலும் குஞ்சுக்குளம் கிராமத்தின் அரைவாசி நிலப்பரப்பு உவர்நிலமாக மாறியுள்ளது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட வன்னேரிக்குளம் குஞ்சுக்குளம் பகுதியில்; தற்போது 600 ஏக்கர் வரையான வயல் நிலங்கள் பயிர் செய்கை மேற்கொள்ளமுடியாத உவர் நிலமாக மாறியுள்ளன. நன்னீர் கிணறுகள் உவர் நீராக மாறியுள்ளதுடன் இங்குள்ள பெருமளவான குடும்பங்கள் வேறு பகுதிகளை நோக்கி குடிபெயர்ந்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் ஆரம்பகாலத்தில் கிளி குஞ்சுக்குளம் சணேசா வித்தியாலயம் என்ற பாடசாலையும் கலை வாணிமுன்பள்ளி என்ற சிறுவர் பாடசாலையும் காணப்பட்டு இன்று இயங்காது அழிந்து போய் விட்டது.
இப்பகுதியில் உவராகியதால் இங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்ற நிலையில்; தற்போது 12 வரையான குடும்பங்கள் மாத்திரம் வாழ்ந்து வருகின்றன.

குஞ்சுக்குளம் முழமையாக உவர் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் தற்போது சோலை இரண்;டு ஏக்கர் திட்டம் மற்றும் ஆனைவிழுந்;தான் கிராமம் ஆகிய பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் தொடக்கி விட்டது.
குறித்த பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் உவர் நீர்;த்தடுப்பணைகளை அமைத்து இக்கிராமங்களை உவர் நீர் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்;துமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.