செய்திகள்

கிளிநொச்சி பஸ் விபத்தில் இளம்பெண் பலி

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
முல்லைத்தீவில் இருந்து  வவுனியா நோக்கி சென்ற தனியார் பேரூந்து, முன்னால் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை  வேகமாக முந்திச் செல்ல முற்பட்ட போது கிளிநொச்சி பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே மரணம் அடைந்தார். இச் சம்பவத்தில் ஜெ.சித்திராதேவி (வயது 23) என்பவரே மரணமடைந்தவராவார்.
மரணம் அடைந்தவரின் உடல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன் மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்சார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
DSC00538 DSC00547