செய்திகள்

கிளிநொச்சி மாவடத்திற்கு 09 மில்லியனும் யாழ் மாவட்டத்திற்கு 06 மில்லியனும் ஒதுக்கீடு

2016ம்ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தினூடாக யாழ்ப்;பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்திக்காக 15 மில்லியன் ரூபா நிதி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் பகிந்து அளிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவடத்திற்கு 09 மில்லியனும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 06 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குpளிநொச்சி மாவட்டத்தில் கல்வி அபிவிருத்திக்கென 2.37 மில்லியனும் விளையாட்டுத்துறைக்கு 1.24 மில்லியனும் கலாச்சாரத்துறைக்கு 0.82 மில்லியனும் சமூகநலத்துறைக்கு 2.95 மில்லியனும் கடற்தொழில்த்துறைக்கு 1.22 மில்லியனும் குடிநீர் விநியோகத்துக்கு 0.4 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச செயலக ரீதியாக கரைச்சி செயலாளர் பிரிவுக்கு 3.4 மில்லியனும் கண்டாவளை செயலாளர் பிரிவுக்கு 2.05 மில்லியனும் பூநகரி செயலாளர் பிரிவுக்கு 2.5 மில்லியனும் பச்சிலைப்பள்ளி செயலாளர் பிரிவுக்கு 1.5 மில்லியனும் மொத்;தமாக 09 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல் யாழ்ப்பாணத்தினுடைய கல்வி அபிவிருத்தி 2.2 மில்லியனும் விளையாட்டுத்துறைஅபிவிருத்திக்கு 0.4 மில்லியனும் சமூக நலனுக்கு 2.2 மில்லியனும் கலாச்சார அபிவிருத்திக்கு 0.8 மில்லியனும் கடற்தொழில் அபிவிருத்தி 0.4 மில்லியனும் மொத்தம் 06 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 n10