செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் புதிய நீதவனாக ஏ.ஏ.ஆனந்தராசா

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் புதிய நீதவனாக ஏ.ஏ.ஆனந்தராசா அவர்கள் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவனாக கடமையாற்றிய ஏ.ஜே.பிரபாகரன் அவர்கள் மாற்றலாகி சென்றதையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் புதிய நீதவனாக ஏ.ஏ.ஆனந்தராசா அவர்கள் (18-04-2016) கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து முதலாவது நீதிவனாக பெ.சிவகுமார் அவர்களும் 2012ம் ஆண்டு செம்ரம்பர் மாதம் 3ம் திகதி முதல் எம்.ஐ.வகாப்தீன் அவர்கள் இரண்டாவது நீதிவனாகவும் மூன்றாவது நீதவனாக  ஏ,ஜே.பிரபாகரன் அவர்களும் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நீதிவான் ஏ.ஜே.பிரபாகரன் அவர்கள் மாற்றலாகி சென்றதையடுத்து யாழ் மாவட்ட நீதிவனாக கடமையாற்றி மேலதிக நடவடிக்கைகளுக்காக அவுஸ்ரேலியாவில் மேற்கொண்டு விட்டு திரும்பிய அன்றோ அமலவளன் ஆனந்தராசா அவர்கள்  6) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவனாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
n10