செய்திகள்

கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியை பகிர்ந்துகொண்டமை புதிய அத்தியாயம் என்கிறார் துரைரத்தினம்

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சு பொறுப்புகளை ஏற்றது தமிழர்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.  

இன்று காலை வவுணதீவில் நடைபெற்ற நிகழ்வில் கோட்டமட்ட விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும் அந்த அத்தியாயம் பல விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இதனைப்பெற்றுக்கொண்டதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.  கொள்கையில் இருந்து சற்று பரிணாமிக்கின்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டன் காரணமாகவே அமைச்சர் என்ற நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் நோக்கத்தின் அடிப்படையில் அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டு அவற்றினை மக்களுக்கு கொண்டுசெல்லும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

IMG_0068 IMG_0079 IMG_0102