செய்திகள்

கிழக்கு உக்ரைன் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 30 பேர் பலி

கிழக்கு உக்ரைனில் கிளாச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டொனெஸ்க் நகரில் உள்ள நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 30 ற்கும் மேற்பட்ட சுரங்கதொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவத்திற்கும் அங்கு நடைபெறும்மோதல்களுக்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டுள்ள உக்ரைன் அரசாங்கம் எனினும் அந்த பகுதிக்கு மீட்பு பணியாளர்கள் செல்வதை கிளர்ச்சிக்காரர்கள் தடுத்துள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதா குற்றம்சாட்டியுள்ளது.
வெடிப்புச்சம்பவம் இடம்பெற்ற சுரங்கத்திற்கு வெளியே தகவல்களை பெறுவதற்காக சுரங்கத்தொழிலாளர்களின் குடும்பத்தவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் போது உயிர்தப்பிய ஓருவரை அவர்கள் மத்தியில் காணமுடிந்துள்ளது. எனினும் அவரது கையில் பலத்த காயமேற்பட்டுள்ளது.
சுரங்கத்தின் மிக ஆழமான பகுதியில் இடம்பெற்ற அந்த வெடிப்பு சம்பவத்தில் பலியான 5 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக சுரங்க தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தொழிலாளி ஓருவரின் சகோதரி உண்மையை தெரிவியுங்கள் ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள் என மன்றாடியதை காணமுடிந்துள்ளது