செய்திகள்

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ தனது இராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க திட்டம்

நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் தனது இராணுவபிரசன்னத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.உக்ரைனில் தொடரும் மோதல்களை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பனிப்போர் காலத்திற்கு பின்னர் நேட்டோ தனது பிரசன்னத்தை கிழக்கு ஐரோப்பாவில் பலமடங்காக அதிகரிக்கவுள்ளதாக நேட்டோவின் தலைவர் ஜென் ஸ்டென்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.
ரஸ்சியாவின் ஆக்கிரமிப்பு காரணமாக நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலையிலுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ருஸ்சியா சர்வதே சட்டங்களை மீறி கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதன் பின்னரே இது குறித்து சிந்தித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரசல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோவின் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பின்பேது கிழக்கு ஐரோப்பாவில் படைபலத்தை அதிகரிப்பது குறித்து உறுதியளிக்கப்படும் என தெரியவருகின்றது.
இரண்டு நாட்களுக்குள் தயாராக கூடிய 5000 படையினரை கொண்ட விசேட படைப்பிரிவொன்றை கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்துவது குறித்து ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகின்றன.