செய்திகள்

கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை அவசரமாகப் பெற்றுக்கொடுக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் எடுத்த முயற்சியின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பொதுமக்களின் சகல பிரச்சனைகளுக்கும் உடனடியான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நாளை காலை 9.00 மனியில் இருந்து மாலை 04.00 மணிவரை மாபெரும் நடமாடும் சேவை இடம்பெற உள்ளது.

எனவே குறிப்பிட்ட இந்த நடமாடும் சேவையில் சகல பொதுமக்களும் தங்களின் பிரச்சனைகள் காணி, விவசாயம், வீதி, வடிகான், வீடமைப்பு, பாடசாலை, ஆசிரியர்கள், மாணவர்கள், முதியோர் , இளையோர், கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்று இன்னும் இன்னும் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட இந்நடமாடும் சேவையில் கிழக்கு மாகாண சகல அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், சகல திணைக்களங்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்கவுள்ளன. அத்துடன் அம்பாரை மாவட்டத்துக்கான நடமாடும் சேவை கல்முனையிலும், அம்பாரையிலும் விரைவில் இடம்பெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.