செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநராக மஜீத்தையும் முதல்வராக தயா கமகேவையும் நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாண ஆளுநராக மஜீத்தையும் முதல்வராக தயா கமகேவையும் நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணசபையின் புதிய ஆளுனராக பொத்துவிலை சேர்ந்த எம்.எஸ்.டி.மஜீத் என்பவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் புதிய முதலமைச்சராக ஐ.தே.கட்சியை சேர்ந்த தயாகமகேவை நியமிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசில் இடம்பெற்ற மாற்றத்தினை தொடர்ந்து மாகாணசபைகளிலும் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.

இதேநேரம் கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுப்பதவிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.