கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமைச்சு கடமைகளை பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கல்வி அமைச்சராக கி.தண்டாயுதபாணியும் விவசாய அமைச்சராக கி.துரைராஜசிங்கமும் இன்று தமது கடமைகளை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார், கலையரசன்,இராஜேஸ்வரன் ஆகியோர் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.