கிழக்கு மாகாண சபை: பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு இன்று! கூட்டமைப்பு ஆதரிக்கும்
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள நிலையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் மு.கா.விற்குமிடையே இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தைகளின் போது காணப்பட்ட இணக்கத்தை அடுத்து வரவுசெலவுத்திட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.