செய்திகள்

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அக்டோபரில் நியமனம்: கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கு  எதிர்வரும் ஒக்டோபர் மாதமழவில் நியமனம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இன்று ஓட்டமாவடி அரபா வித்தியாயலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் :

கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக பட்டம்பெற்ற ஏராளமானவர்களுக்கு இன்னும் அரச துறையில் நியமனம் வழங்கப்படாமல் இருப்பது மனவேதனையாக விடையம் .

கடந்த அரசு காலத்தில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று வழங்கப்பட்ட அரச நியமனங்கள் கூட பல நூறு மைல்கள் தூரத்தில் வெளிமாகாணங்களில் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவைகள் இனியும் நடைபெற அனுமதிக்காது சரியான நேரத்தில், சரியான வேலையை, நியாயமாகச்செய்ய என்னை நான் அர்பணித்துள்ளேன். அதற்காக இன்று கிழக்கில் கூட்டாட்சியான நல்லாச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந் நல்லாட்சியில் இணைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து இன்று கிழக்கில் நல்லாட்சி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாட்சியில் முடிந்தளவு மக்களுக்கான சேவையை சரிவரச் செய்ய நாம் அனைவரும் எங்களை அர்பணித்துள்ளோம். எனவே எவருடைய நாசகார சதிகளுக்கும் அடிபணியாது இன்று சில விசமிகள் பொய்யானப் பிரச்சாரங்களை முடக்கி விட்டு, இனங்களுக்கிடையிலான விரிசலை மீண்டும்  ஏற்படுத்த முனைந்துகொண்டிருக்கின்றனர்.

எனவே இப்படியான விசமிகளின் பொய்யானப் பிரச்சாரங்களை தூக்கி வீசிவிட்டு நல்லாட்சியுடன் கைகோர்த்து நாட்டை சமாதான சூழ்நிலையில் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் கல்விப்பணிப்பாளர், பிரதிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.