செய்திகள்

கிழக்கு முதலமைச்சர் பதவியை எமக்குத் தர ஜனாதிபதி உடன்படிட்டது ஏன்? ஹக்கீம் விளக்கம்

ஜனாதிபதி தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார் என எனக் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், அந்த ஆட்சியில் இணைந்துகொள்ளுமாறு தமிழர் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறினார்;.

சம்மாந்துறை வேர்கள் விழுதுகள் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை  நடைபெற்ற எம்.வை.எம். மன்சூர் அவர்களின் 25வது நினைவுதின நிகழ்வில் பிரதம அதிதியாக்க கலந்துகொண்டு உiயாற்றியபொழுதே நகர அபிவிருத்தி நீர் முகாமைத்தவ நீர்வினியோக அமைச்சரும் முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

ஆங்கு உரையாற்றும்பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தாவது,

தேர்தல் பகிஷ்கரிப்பு தமிழர் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் விட்ட மாபெரும் தவறுகளில் ஒன்று. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர், அப்போதைய கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மேடை மேடையாக முழங்கினார்கள்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை புலிகளின் வற்புறுத்தலின் பேரில் தமிழர் தரப்பு பகிஷ்கரித்தமைதான் அந்தக் கொடுங்கோலாட்சிக்கு வழிகோலியது.

இனியும் தேர்தல் பகிஷ்கரிப்பில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்பது நிச்சயமாக இருந்தாலும், ஆரம்பகாலத்தில் இருந்தே அந்த விவகாரம் அவ்வப்போது பரிசீலிக்கப்பட்டது. அது அவர்களது போராட்டத்தின் விதம் விதமான பரிமாணங்களில் ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது.

இன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கின்றது. ஆயுதக் குழுக்கள் இருந்த காலத்தில் அச்சுறுத்தி அடிபணிய வைக்கின்ற பாங்கில் நடந்த சம்பவங்கள் மற்றும் அவற்றினால் விளைந்த விபரீதங்கள் என்பன எவ்வாறிருந்த போதிலும், இன்று பரஸ்பரம் விட்டுக்கொடுப்போடு இலங்கை என்ற தேசியத்துக்குள் தமிழ்ப்பேசும் சமூகங்கள் உச்சக்கட்ட அதிகாரப் பகிர்ஐவு அனுபவிப்பதற்கான தகுதி குறித்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.

கிழக்கில முஸ்லிம் காங்கிரஸ் நியாயப்படுத்துகின்ற விடயங்களைப் பொறுத்தவரையில் ஆசன வித்தியாசங்களை வைத்து கிழக்கு மாகாண சபை ஆட்சி என்ற விடயத்தில் ஒரு பெரிய கயிறிழுப்பு நடந்துகொண்டிருக்கின்றது.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எங்களுக்கு வித்தியாசமான மக்கள் ஆணை கிடைத்தது. அது சாதாரணமான மக்கள் ஆணையல்ல. நீண் இடைவெளிக்குப் பின்னர் கிடைத்த மக்கள் ஆணையாகும்.

ஆனால், அந்தத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக நடந்துகொண்டு ஆளுங்கட்சியுடன் சேர்ந்து அதனை விரயஞ் செய்து விட்டதாகவும் சோரம்போய் விட்டதாகவும் கூறப்பட்டது.

இன்றும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதற்காக எங்கள் மீது வசை பாடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அரசியலில் சில நியாயங்களை அவர்கள் பரிந்துகொள்ளல் வெண்டும். அன்று கிழக்கு மாகாணசபை விடயத்தில் அரசுடன் நாங்கள் ஒத்துப் போகாதிருந்தால் வடமாகாண சபைத் தேர்தலையே நடத்தியிருக்க மாட்டார்கள்.

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தோதல் நடைபெற உள்ள சூழ்நிலையில் இந்நாட்டு தெற்கில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்லாடசி நிறுவப்படுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்ட முற்போக்குச் சக்திகள் இனவாதம் என்ற பிற்போக்கு அரசியல் படுகுழிக்குள் இழுத்துக்கொண்டு போய்த் தள்ளுகின்ற விதத்தில் நாம் வடகிழக்கு அரசியல் பற்றி சிந்திப்பது தவறாகும்.

அதேவேளையில் முஸ்லிம் காங்கிரசுடைய உரிமையை வழங்க வேண்டிய கடப்பாட்டை புதிய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.  கட்சியின் தலைவரை அதன் செயலாளர் தொற்கடித்திருக்கின்றார். செயலாளராக இருந்தவர் இப்போது தலைவராகி இருக்கின்றார்.

ஜனாதிபதியின் பார்வையில் யார் எந்தப்பதவியில் இருந்தார் அல்லது இருக்கின்றார் என்பது அவருக்கு முக்கியமல்ல. தனது அரசியல் கூட்டணி செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பகத் தன்மையோடு முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கின்றார். அதற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

வித்தியாசமான மக்கள் ஆணை கிடைத்திரக்கின்றது. முஸ்லிம் கங்கிரஸ், nமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுக்கு வித்தியாசமான மக்கள் ஆணைகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத் தேர்தலுகு;குப் பிறகு ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட புரிந்துணர்வு தொடர்பான விடயம் முக்கியமானது. அதில் நாணயம் பேணப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் பேசுகின்றோம். அதற்கு வித்தியாசமாக கூட்டமைப்பினர் பேசுகின்றனர். இல்லாத பொல்லத விமர்சனங்களையும் செய்கின்றனர். நாங்கள் அவாகளை விமர்சிக்கவோ தூற்றவோ விரும்பவில்லை.

கிழக்கில் அமையும் ஆட்சி மிகவும் நட்புறவோடு கூடியதாக இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம். இன்னும் சில தினங்களில் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சர் நியமிக்கப்படவுள்ளார்.

மிகவும் திறந்த மனதோடு எல்லாக் கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுப்போம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் எங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்குரிய அமைச்சர்களை நியமிப்பார்கள். எங்களது ஆட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனபவற்றுக்கும் அழைப்பு விடுப்போம். ஆதில் நாம் ஆர்வமாக இருக்கின்றோம்.

எந்த நோக்கத்திற்காக மத்திய அரசாங்கத்தில் கொடங்கோலாட்சியைத் தோற்கடித்து புதிய ஆட்சியை அமைத்தோமோ அத்தகைய நல்லாட்சி ஒன்றிற்கான கோட்பாட்டின் அடிப்படையில் முதலில் கிழக்கு மாகாணத்தில் அவ்வாறான ஆட்சி ஒன்றை நிறுவிக் காட்டுவதற்கான ஒர வாய்ப்பை இப்போது நாம் பெற்றிருக்கின்றோம். எங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பிரகாரம் முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சரின் கீழ் அடுத்த இரண்டரை வருடங்களுக்கான கிழக்கு மாகாண ஆட்சி முழு நாட்டுக்கும் முன்மாதிரியானதாக இறைவன் அருளால் அமைய இருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்தபோது அதில் முதலாவது உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட படுகொலை செய்யப்பட்ட எம்.வை.எம். மன்சூர் அவர்களின் தியாகத்தை நாம் இச்செயற்பாட்டின் மூலம் அர்த்தபுஷ்டியாக்கவுள்ளோம் என்றார்.

மன்சூர் ஏ. காதிர் லைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.ஐ. எம். மன்சூர் ஆகியோரும் உரையாற்றினார்.