செய்திகள்

‘கிழக்கு முனையத்தை காட்டி மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுக்க திட்டம்’

கொழும்புத் துறைமுகத்தின் வடக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுக்கும் திட்டத்துடனேயே கிழக்கு முனைய விடயத்தில் அரசாங்கத்திற்குள் எதிர்ப்புகள் முன்வைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கிழக்கு முனைய விடயத்தில் அரசாங்கத்திற்குள் அமைச்சர்கள் பலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக நாளைய அமைச்சரவை கூட்டத்திலும் கலந்துரையாடப்படவுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்துள்ள ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அரசாங்கத்திற்கு எதிர்ப்புகள் திட்டத்துடனேயே முன்வைக்கப்பட்டுள்ள என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு முனையத்தை கொடுப்பதற்கு எதிர்ப்புகள் காணப்படுகின்ற என்று காட்டி மேற்கு முனையத்தை இலகுவாக கொடுப்பதற்கே முயற்சிக்கப்பட்டுள்ள என்று அவர் தெரிவித்தள்ளார். -(3)