செய்திகள்

கீதா, சாலிய பதவி நீக்கம் ;11 பேருக்கு புதிய பதவிகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன்படி, புதிதாக நியமனம்பெற்றவர்களின் விபரம் வருமாறு,

கம்பஹா மாவட்ட அமைப்பாளர் – பிரதீப் ஜெயவர்த்தன, கிரியால ஆசன அமைப்பாளர் – வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க, கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள் – மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் காமினி டி சில்வா மற்றும் புத்திக இத்தமல்கொட, களுத்துறை மாவட்ட அமைப்பாளர் – மனுல சமல் பெரேரா, காலி மாவட்ட அமைப்பாளர் – பியல் தர்ஷன குருகே, கேகாலை மாவட்ட அமைப்பாளர் – நலின் புஷ்பகுமார, குருநாகல் மாவட்ட அமைப்பாளர் – துஷார திலகரத்ன, பெந்தர – எல்பிடிய இணை அமைப்பாளராக  பெந்தோட்டை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் கயான் கிரிஷான் சிறிமான்ன மற்றும் எல்பிடிய பிரதேசசபையின் முன்னாள் தலைவர் அமில ஹர்ஷன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
n10


n10