செய்திகள்

கீதைப் போட்டியில் வென்று சாதித்த இஸ்லாமிய மாணவி

மும்பையைச் சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திகு 6 ஆம் வகுப்பு மாணவி. மும்பையில் நடந்த கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். ஒரு இஸ்லாமிய பெண் கீதை போட்டியில் முதல் பரிசு பெற்றது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்து உள்ளது.

மும்பையில் கிருஷ்ணா சர்வதேச சங்கமான இஸ்கான், கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்து தேர்வு மூலம் போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 617 பேர் பேர் கலந்து கொண்டனர். இதில் மும்பை மீரா ரோட்டு காஸ்மோபாலிட்டன் பள்ளியைச் சேர்ந்த மரியம் ஆசிப் சித்திகு என்ற முஸ்லீம் மாணவி முதல்பரிசு பெற்றார்.

இவர் பைபிளும் படித்து வருகிறார். குரான் விரிவுரையாற்ற படித்து உள்ளார். மேலும் தற்போது மொழிபெயர்க்கப்பட்ட கீதையைப் படித்து முடித்து உள்ளார்.இந்நிலையில், இஸ்கான் வைத்த போட்டி தேர்வில், மரியம் 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

இது தொடர்பாக மரியம் கூறுகையில்,

“எனக்கு எப்போதும் மதங்கள் குறித்த ஆர்வம் இருக்கும் . அடிக்கடி மத சம்பந்தமான புத்தகங்களை ஓய்வு நேரத்தில் படித்து வந்தேன். இந்த போட்டி குறித்து எனது ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். புத்தகத்தில் படித்ததை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக நான் கருதினேன். இந்த போட்டியில் கலந்து கொள்ள எனது பெற்றோரும் ஆதரவும் ஊக்கமும் அளித்தனர்’ என்றார்.

மாணவியின் தந்தை ஆசிப் சித்திகு கூறும் போது,” எங்கள் குடும்பம் மரியாதையான குடும்பம் நாங்கள் அனைத்து மதத்தையும் ஏற்று கொள்வோம் எங்களிடம் எந்த மத வெறுப்போ தவறான உபதேசமோ கிடையாது” என்று கூறினார்.