செய்திகள்

குஜராத் பந்துவீச்சாளர்களை களங்கடித்த டெல்லியின் மோரிஸ்: சிக்ஸர்களால் ரசிகர்களை கவர்ந்தார்

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி அடைந்தாலும் அனைத்து ரசிகர்களையும் தனது சிக்ஸர் மாயாஜலத்தால் கிரிஸ் மோரிஸ் கவர்ந்துவிட்டார்.டெல்லி – குஜராத் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துவிட்டது. முதல் இன்னிங்சின் முற்பகுதியும், இரண்டாவது இன்னிங்சின் பிற்பகுதியும் அசத்தலான பேட்டிங் செய்யப்பட்டது.

குஜராத் அணிக்காக முதலில் களமிறங்கிய மெக்கல்லமும், ஸ்மித்தும் தங்களது அதிரடியால் டெல்லி அணியை பந்தாடினர். 9 ஒவர்களில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

28-4
குஜராத் அணி 10.4 வது ஓவரில் 112 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட் விழுந்தது. ஸ்மித் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். மீதமிருந்த 9.2 ஓவர்களில் வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. போட்டி அப்படியே தலைகீழாக மாறி விட்டது. மெக்கல்லம், ஸ்மித்தின் அதிரடி வீணாய் போனது. 220 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்பு இருந்த நிலையில் வெறும் 172 ரன்கள் மட்டுமே குஜராத் அணி எடுத்தது.
அதேபோல், 173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தவித்தது. அந்த அணி 10.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்தது. ஆனால் மோரிஸ் களமிறங்கிய பிறகு ஆட்டத்தின் போக்கே மாறி விட்டது.

மோரிஸ் களமிறங்கிய போது டெல்லி அணி வெற்றி பெற 56 பந்துகளில் 116 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிவேக சதத்தை(17 பந்துகளில்) விளாசினார். போட்டி முடியும் போது மோரிஸ் 32 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆனால் அவர் முகத்தில் சிரிப்பு இல்லை. பிரவின் குமாரும், பிராவோவும் அவரது சிரிப்பை திருடிவிட்டனர். கடைசி இரண்டு ஓவர்களில் அவர்கள் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். குறிப்பாக பிரவின் குமார் 19-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

மோரிஸ் 6-வது வீரராக களமிறங்கினார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலே சிக்ஸர் பறக்கவிட்டார். அதற்கடுத்து மொத்தம் 8 சிக்ஸர்களை அவர் விளாசினார். சுமித் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

மோரிஸின் அபார ஆட்டத்தில் குஜராத் அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் பிரவின் தம்பே இருவருக்கும் தலா ஒரு ஓவர் மட்டுமே ரெய்னா வழங்கினார். இருவரும் இணைந்து 31 ரன்கள் கொடுத்தனர்.

28-55