செய்திகள்

குடத்தனையில் சுமந்திரனின் புதிய அலுவலம் திறப்பு: முதலமைச்சர், மாவை விஜயம்(படங்கள்)

வடமராட்சி குடத்தனைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் புதிய அலுவலகத்தின் செயற்பாடுகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வைபவ ரீதியாக பால்காய்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சுமந்திரனுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

சுமந்திரனின் சொந்த இடமான குடத்தனையிலுள்ள அவரது மூதாதையரின் இல்லத்தில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  பால் காய்ச்சும் நிகழ்வில் அவரது ஆதரவாளர்கள் பலரும் பங்குகொண்டனர்.

21

20

19

18

17

16