செய்திகள்

குடாநாட்டு குழப்ப நிலையின் பின்னணியில் ஆயுதக்குழு: விஜயகலா மகேஸ்வரன் குற்றச்சாட்டு

புங்குடுதீவு மாண­வியின் படு­கொலை தொடர்பில் குடா­நாட்டில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­க­ர­மான நிலையின் பின்­ன­ணியின் ஆயு­தக்­கு­ழுவே செயற்­பட்­டு­வ­ரு­கி­றது என பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புங்­கு­டு­தீவு மாணவி மீதான பாலியல் வல்­லு­றவு படு­கொலை ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­டைய பத்­துப் ­பே­ருக்கும் பொது மக்கள் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை நிறை­வேற்ற வேண்டும் என்றும் பிர­தி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் ஆவே­ச­மாக வேண்­டுகோள் விடுத்தார்.

“மாண­வியின் படு­கொலை தொடர்பில் குடா­நாட்டில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­க­ர­மான நிலையின் பின்­ன­ணியின் ஆயு­தக்­கு­ழுவே செயற்­பட்­டு­வ­ரு­கி­றது. இத­னைக் ­கட்­டுப்­ப­டுத்­து­வதில் பொலி­ஸாரும் அச­மந்­தப்­போக்கை கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். புலி­களின் காலத்தில் இத்­த­கைய பாலியல் வல்­லு­று­வுகள் இடம்­பெற்­ற­தில்லை. அப்­படி நடந்தால் 24 மணித்­தி­யா­லத்தில் தண்­டனை வழங்­கி­வி­டுவர்” என்றும் அவர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கையில் கறுப்பட்டி அணிந்த நிலையில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். பிர­தி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

“புங்­கு­டு­தீவு மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் இந்­தப் ­பா­ரா­ளு­மன்­றத்தில் எனது துக்­கத்தை வெளிப்­ப­டுத்­து­கிறேன். மேற்­படி மாணவி படு­கொலை செய்­யப்­பட்டு 7 தினங்கள் ஆகின்­றன. இதனால் இன்று வட­மா­காணம் துய­ரத்தில் ஆழ்ந்­துள்­ளது. அது­மட்­டு­மல்­லாது யாழ்ப்­பா­ணத்தின் இயல்பு நிலையும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த மாணவி கடத்­தப்­பட்ட மறு­தினம் அதி­காலை 6.00 மணி­ய­ளவில் அவ­ரது சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு பொலி­ஸா­ருக்கு அறி­வித்த போதும் பொலிஸார் 9.00 மணிக்கே வருகை தந்­தனர். முன்­ன­தாக பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டச்­சென்ற தாயார் நான்கு மணித்­தி­யா­லங்­க­ளாக விசா­ர­ணைக்கு உற்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இது தேவை­யற்ற விட­ய­மாகும். அது­மாத்­தி­ர­மின்றி குறித்த மாணவி சிநே­கி­த­னுடன் சென்­றி­ருக்­கலாம் எனக்­ கூ­றி­யுள்­ள­துடன் மறுநாள் வந்து முறை­யி­டு­மாறு பொறுப்­பின்­றிய நிலையில் அசட்­டை­யீ­ன­மாக செயற்­பட்­டுள்­ளனர்.

மாணவி மீதான பாலியல் வல்­லு­றவு மற்றும் படு­கொலை ஆகி­ய­வற்­றுடன் 10 பேருக்கு தொடர்­புள்­ளது. இதில் வேலணை பிர­தேச சபையின் உறுப்­பினர் ஒரு­வரும் அடங்­கு­கிறார். கடந்த காலங்­க­ளிலும் இப்­பி­ர­தே­சங்­களில் தொடர்ச்­சி­யான பாலியல் வல்­லு­ற­வுகள், படு­கொ­லைகள், சிறு­மி­களை பாலியல் வல்­ல­ற­வுக்­குட்­ப­டுத்தல் போன்ற குற்­றச்­செ­யல்கள் இடம்­பெற்­றன. அங்கு இயங்கி வரு­கின்ற ஆயு­தக்­கு­ழுக்­க­ளா­லேயே இந்தக் குற்­றச்­செ­யல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. சிறு­மி­களை, யுவ­தி­களை பெண்­களை படு­கொலை செய்து கிண­று­களில் போட்டு புதைத்­ததும் இந்த ஆயு­தக்­கு­ழுக்­களே ஆகும்.

இன்று வடக்கில் குழப்­ப­ர­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதன் பின்­னணியில் அங்கு இயங்­கு­கின்ற ஆயு­தக்­கு­ழுவே இருக்­கின்­றது. இத­னைக்­கட்­டுப்­ப­டுத்­து­வதில் பொலி­ஸாரும் அசட்­டை­யாக இருக்­கின்­றனர். மேற்­படி ஆயு­தக்­கு­ழுக்கள் இன்று பல­வந்­த­மாக பொது மக்­க­ளுக்கு சொந்­த­மான வீடு­க­ளையும் உடை­மை­க­ளையும் பறித்து அலு­வ­ல­கங்­களை நடத்தி வரு­கின்­றனர். எனவே வடக்கில் இருக்கின்ற ஆயுதக்குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும். மேலும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தவறிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக பதவி விலக்கவேண்டும்” என்றார்.