செய்திகள்

குடிநீர் வசதியின்மை காரணமாக 347 பேர் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்தின் பிரதான வீதி புனரமைக்கப்படாமை போதிய குடிநீர் வசதியின்மை காரணமாக 99 குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கிழ் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஓர் கிராமமாக காணப்படும் தட்டுவன்கொட்டிக்கிராமத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையினால் இங்கு வாழும் மக்கள் தினமும் பல்று சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.
அதாவது குறித்த கிராமத்தின் பிரதான வீதியாக காணப்படும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி வீதி இன்று வரைப் புனரமைக்கப்படாமல் காணப்படுவதுடன் இதனூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
குறித்த வீதியில் உள்ள பாலங்கள் புனரமைக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றன.இவ்வாறு குறித்த வீதி காணப்படுவதனால் பருவமழை காலங்களிலும் ஏனைய காலங்களிலும் மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதேவேளை குறித்த கிராமத்திற்கான குடிநீர் வேறு இடத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டு கரைச்சிப்பிரதேச சபையினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை எனவும் அவ்வாறு தமக்கு தேவையான குடிநீரைப் பெறுவதற்கு பரந்தன் அல்லது இயக்கச்சி ஆகிய இடங்களிற்கு சென்றே பெற வேண்டியுள்ளது.
பிரதேச சபையினால் சீரான குடிநீர்விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள் வீதி சீரின்மையால் குடிநீர் பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறு பிரதேசசபையின் குடிநீர் விநியோகம் சீராக இடம்பெறுவதில்லை எனவும் தற்போது வரட்சியின் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்துக் காணப்படுகின்றது.
அத்துடன் தட்டுவன்கொட்டி பாடசாலைக்கான குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்ளப்படாமையினால் மாணவர்களும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு போதிய அடிப்படை வசதிகள் இன்றியும் போக்குவரத்து வீதி சீரின்மையால் போக்குவரத்துச் செய்வதிலும் தட்டுவன்கொட்டி கிராமத்தில் வாழ்ந்து வரும் 99 குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் வரையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
n10