செய்திகள்

குடியேற்றகாரர்களின் மற்றுமொரு படகு கடலில் மூழ்கியுள்ளது.

குடியேற்றர்காரர்கள் பலருடன் பயணிததுக்கொண்டிருந்த படகு சிசிலிக்கு அருகில் மூழ்கியதில் பலர் பலியாகியிருக்கலாம் என சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட படகிலிருந்து தப்பியவர்கள் கட்டானியா என்ற நகரத்திற்கு வந்துசேர்ந்துள்ளதாகவும்,தங்கள் படகில் 140 ற்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டதாகவும் அவர்களில் 40 பேர் கடலிற்குள் வீழ்ந்ததாக அவர்கள் குறிப்பிட்டதாகவும் சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டதாக சிலர் தெரிவித்தனர், வேறு சிலர் 40 பேர் கடலில் மூழ்கியதாக தெரிவித்தனர் என அந்த அமைப்பின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மத்தியதர கடலைகடக்க முயன்ற 1750 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.