செய்திகள்

குடியேற்றக்காரர்கள் 700 பேருடன் பயணித்த படகு மத்திய தரைக்கடலில் மூழ்கி விபத்து

லிபிய கரையோரமாக குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்ததில்,அதில் பயணித்த 700 பேரும் கடலில்  மூழ்கியிருக்கலாம் என்று தெரிவக்கப்படுகின்றது.இதுவரை 28 பேர் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளனர் என தகவல் வௌியாகியுள்ளதுமீட்பு நடவடிக்கைகளில் 20 கப்பல்களும், 3 ஹெலிகொப்ட்டர்களும் ஈடுபட்டுள்ளன.

வடக்கு லிபியாவில் சில நாட்களுக்கு முன்னதாக, இடம்பெற்ற படகு விபத்தில் 400 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.