செய்திகள்

குமார் குணரத்தினம் அரசியல் செய்ய இடமளிக்கப்பட வேண்டும்

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் இலங்கையில் அரசியல் செய்ய இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கையின் சில ஊடக அமைப்புக்கள் கேட்டுக்கொண்டன.

முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சுதந்திர ஊடக இயக்கம், தொழில்சார் ப்பத்திரிகையாளர் சங்கம், ஜனாயகத்துக்கான ஊடக இயக்கம் என்பன இதனை தெரிவித்துள்ளன.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் நாட்டுக்கு வருமாறு  அழைப்பு விடுத்துள்ள புதியஜனாதிபதி அவர்களுக்கான உரிமைகளையும் வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில் குமார் குனரத்தினத்துக்கு அரசியல் செய்ய இடமளிக்க வேண்டும் என இவ்வமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.