செய்திகள்

குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையை வலியுறுத்தி மட்டடக்களப்பில் போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரியும் குமார் குணரெட்னத்தின் அரசியல் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு நகரில் கையெழுத்துப்பெறும் போராட்டம் ஒன்றினை முன்னிலை சோசலிசக்கட்சி முன்னெடுத்துவருகின்றது.

இன்று காலை 11.00மணி முதல் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய், குமார் குணரத்தினத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தரவேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகையில் கையொப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிகழ்வில் முன்னிலை சோசலிசக்கட்சி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திராநந்த,சமவுரிமை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குமார் குணரெத்தினத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையினை பறிக்காதே என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.