செய்திகள்

குமார் குரணட்ணத்தை நாடு கடத்துவதற்கு 18ஆம் திகதி வரை நீதிமன்றம் தடை

முன்னிலை சொசலிசச் கட்சியின் அரசியல் துறை உறுப்பினர் குமார் குணரட்ணத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நாட்டிலிருந்து வெளியேற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தன்னை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குமார் குணரட்ணம் மனுவொன்றை தாக்கல் செய்தார். இதையடுத்தே உயர் நீதிமன்றம நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

முன்னதாக, குமார் குணரட்ணத்தை 13ஆம் திகதி வரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டாமென குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அண்மையில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றவேளையே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.