செய்திகள்

குரானில் விஞ்ஞான சிந்தனைகள் காணப்படுகின்றனவா என கேள்வி எழுப்பிய பங்களாதேஸ் புளொக்கர் படுகொலை

பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட அவ்ஜித் ரோய் மதம் மற்றும் விஞ்ஞானம் குறித்த தனது எழுத்துக்களுக்காக இஸ்லாமிய குழுக்கள் சிலவற்றினால் கொலை மிரட்டலுக்குள்ளாகியிருந்தார்.
பங்களாதேஸை சேர்ந்த அமெரிக்க பிரஜையான அவர் தன்னை தனது முகப்புத்தகத்தில் ஓரு பொறியலாளர் மற்றும் எழுத்தாளர் என அறிமுகம் செய்துள்ளார்.
சுதந்திரசிந்தனை, தத்துவம் மற்றும் விஞ்ஞானம் மனித உரிமைகள் ஆகியவற்றில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையுமுண்டு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இறுதி டுவீட் புத்தககண்காட்சியொன்றில் காணப்பட்ட புத்தகங்கள் தொடர்பாக காணப்பட்டது.அந்த புத்தக கண்காட்சியிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கையிலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ரவிதா அகமட் படுகாயமடைந்துள்ளார்.
42 வயதான ரோய் 10 புத்தகங்கள் வரை எழுதியுள்ளார்.தனக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சமீபத்தில்தான்அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்தார்.
சபீர் ரஹ்மான் பராபி என்பவர் அவ்ஜித் ரோய் அமெரிக்காவிலிருப்பதால் தற்போது அவரை கொல்ல முடியாது,பங்களாதேஸ் திரும்பியவுடன் அவர் கொல்லப்படுவார் எனதனதுமுகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும்,அவர் கைதுசெய்துசெய்யப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின்றன.
குறிப்பிட்ட படுகொலை நடைபெற்ற வேளையில் அவர்கள்விடுதலையாகியிருந்தார்களா என்பது தெரியவில்லை.
ரோயுடன் இணைந்து பணியாற்றிய அஹ்சன் அக்பர் என்ற கவிஞர் ரோய் விஞ்ஞான ரீதியிலான சிந்தனையை ஊக்குவிக்க விரும்பிய மெல்லிய குணமுடைய மனிதர் என அவரை வர்ணித்துள்ளார்.
ரோயின்எழுத்துக்கள் மதத்தை நேரடியாக தாக்காமல்மக்களை விழிப்பூட்டமுனைபவை,மக்களின் நம்பிக்கைகள்குறித்து அவர் அவதானமாக இருந்தார்,மக்களைகாயப்படுத்துவது பிழையான அணுகுமுறை என கருதினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவரது எழுத்துக்களில் ஓரு வலிமை காணப்பட்டது. குரானில் விஞ்ஞான சிந்தனைகள் காணப்படுகின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் கடுமையாக விமர்சித்தார்.
குரானில் எந்த விஞ்ஞான அதிசயங்களாவது உள்ளதா என்ற தனது கட்டுரையில் ~~ குரானை அவர்கள் விஞ்ஞ hன நூலாக காண்பிக்க விரும்பினால், அவர்கள் அதில் காணப்படும் ஓரு விஞ்ஞான கொள்கையையாவது தெளிவுபடுத்தவேண்டும், விஞ்ஞான பாடப்புத்தகங்களில் குறிப்பிடும் அளவிற்கு அது தெளிவானதாக காணப்படவேண்டும், ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை – என அவர் குறிப்பிட்டிருந்தார்.
பங்களாதேசில் 2004 இல் கொலை முயற்சியிலிருந்து தப்பிய பின்னர் மூனிச்சில் சில மாதங்களுக்கு பின்னர் இறந்து கிடக்க காணப்பட்ட பங்களாதேசின் கவிஞரும் கல்விமானுமான குமாயுன் அசாத் ரோயின் நெருங்கிய நண்பர்.
தனது நண்பரை தாக்கியவர்கள் இன்னமும் கைதுசெய்யப்படாமலிருப்பது குறித்து ரோய் இவ்வாறு கே;ள்வி எழுப்பியிருந்தார்
நாங்கள் உண்மையில் இவ்வாறான பங்களாதேசத்தை விரும்புகின்றோமா?