செய்திகள்

குருக்கள்மடம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

15வயதையுடைய சிறுவனே நேற்று  இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் இவர் நீதிமன்றினால் சிறுவர் சீர்திருதத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.