செய்திகள்

குருநாகலில் போட்டியிட மகிந்தவுக்கு அழைப்பு

எதிர்வரும் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென குருநாகல் மாவட்டத்தின் மஹிந்த தரப்பு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாக டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார் .

குருநாகல் மாவட்டத்தில் 14 லட்சம் வாக்குகள் இருக்கின்றன அவற்றை மகிந்தவுக்காக பெற்றுகொடுக்க தம்மால் முடியும்.

நாம் விடுத்த அழைப்புக்கு மஹிந்த இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்