செய்திகள்

குருநாகல் மேயரின் வீட்டில் நுழைந்து தாக்குதல்

குருநாகல் மேயர் அநுராத காமினி பெரமுனவின் கெட்டுவான பிரதேச வீட்டின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த சிலர் மேயரின் வீட்டு கதவு, ஜன்னல் மற்றும் கார் என்பவற்றை அடித்து உடைத்துள்ளனர்.

தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.