செய்திகள்

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு இலவசமாக சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பு

சமூர்த்தி உதவி பெறும் 14 இலட்சம் குடும்பங்கள் உள்ளடங்களாக குறைந்த வருமானம் பெறும் 20 இலட்சம் குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் இதன்படி அந்த வேலைத்திட்டத்தை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)