செய்திகள்

குளத்தில் இருந்து சீசீடிவி கமரா பாகங்கள் மீட்பு: கைவரிசை காட்டிய திருடன் பொலிசாரால் கைது

வவுனியாயில் இடம்பெற்ற இரு வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குளத்தில் வீசப்பட்டிருந்த திருட்டுப்போன சீசீடிவி கமராவின் முக்கிய பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா, ஹொரவப்பொத்தானை பகுதியில் உள்ள பிரபல தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்து ஒரு தொகை பணத்தினை திருடிச் சென்றிருந்ததுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவின் சேவர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளையும் திருடிச் சென்றிருந்தனர்.

இதேபோல், கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் பிரபல ஐஸ்கிறீம் விற்பனை நிலையம் ஒன்றில் புகுந்த திருடர் பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றிருந்ததுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவின் சேவர், ஆவணப்பதிவு (மெமறிசிப்) உள்ளிட்ட முக்கிய பகுதிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இவை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் திருட்டின் போது எடுத்துச் செல்லப்பட்ட சீசீடிவி கமராவின் சேவர் உள்ளிட்ட பகுதிகள் பண்டாரிகுளம் குளத்தில் இருந்து பொலிசாரல் மீட்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

IMG_0660

IMG_0634

N5