செய்திகள்

குளவி கொட்டியதால் பொகவந்தலாவ பகுதியில் 10 பேர் பாதிப்பு

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்ட பகுதியில்,  இன்று காலை 11 மணியளவில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்வர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் பத்து பெண் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையின் பின் வீடு திரும்புவார்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

DSC07609

DSC07604

DSC07607

DSC07596

DSC07595

DSC07594

DSC07592

DSC07593