செய்திகள்

குளவி கொட்டியதால் 10 தேயிலைத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ ஒஸ்போன் தோட்டத்தில் 28.05.2015 அன்று காலை 11 மணியளவில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிந்த வேளையில் தேயிலைப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தொழிலாளிகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பாதிக்கப்பட்ட 10 பேரில் 6 பேர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய 4 பேரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் ஒரு ஆணும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.

DSC09577

DSC09579

DSC09580

DSC09582

DSC09584