செய்திகள்

குளவி கொட்டியதில் 10 பேருக்கு காயம்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்வெரி தோட்ட பகுதியில் 21.05.2015 இன்று காலை வேளையில் குளவி கொட்டியதால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலைத் தோட்டப் பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 6 பேர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் 4 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.