குளவி தாக்கியதில் 6 பேர் பாதிப்பு (படங்கள், வீடியோ)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் 04.05.2015 அன்று மாலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததினால் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது தாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 6 பேரில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 5 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களில் 4 பெண்களும் 1 ஆணும் அடங்குகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=4f4nD_lpqxs&feature=youtu.be” width=”500″ height=”300″]