செய்திகள்

குளவி தாக்குதல் – 25 பேர் பாதிப்பு

நுவெரலியா மாவட்டத்தில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் செனன் தோட்டத்தில்  இன்று பிற்பகல் 1 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது தேயிலை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான 25 பேரும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களில் 21 பெண்களும் 4 ஆணும் அடங்குகின்றனர். இதில் ஒரு பெண் தொழிலாளியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வட்டவளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

DSC00267