செய்திகள்

குளிக்க சென்ற வயோதிபர் ஒருவர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி பலி

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் அயரபி தோட்ட பகுதியில் குளிக்க சென்றவரே இவ்வாறு தாக்குதலுக்கு இழக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அயரபி தோட்டத்தை சேர்ந்த 79 வயதுடைய தேவசகாயம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC00003 DSC09998