செய்திகள்

குளிரூட்டப்படாத யோகட் வகைகள் மீட்பு

நாவலபிட்டியில் இருந்து பொகவந்தலாவவிற்க்கு கொண்டு வரபட்ட குளிரூட்டப்படாத யோகட் வகைகளை 10.04.2016 அன்று காலை பொகவந்தலாவ டின்சின் நகரில் வைத்து பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் பி.கே.எல்.வசந்த அவர்களினால் மீட்கப்பட்டது.

இச் சம்பவம் 10.04.2016 அன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பிரதேசத்திற்க்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் பி.கே.எல்.வசந்த தெரிவித்தார்.

கொண்டு வரபட்ட யோகட் வகைகள் குளிரூட்டப்படாத லொறி ஒன்றில் கொண்டு வரபட்டதாக சுகாதார பரிசோதகரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளளது

சுமார் 1031 எண்ணிக்கைகளை கொண்ட யோகட் 30இ240 ரூபா பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பிரதேசத்திற்க்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் பி.கே.எல்.வசந்த மேற்கொண்டுள்ளனர்.vlcsnap-

n10