செய்திகள்

குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த தாய் (படங்கள்)

அநுராதபுரம் மிஹிந்தலை – தொரமடலாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இச்சம்பவத்தில் 22 வயது இளம் தாயும் அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இளம் தாய் தனது குழந்தையுடன் 06.04.2015 அன்று காலை கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனா்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

IMAG0682