செய்திகள்

குழந்தையுடன் தாயொருவர் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை

பிலிமத்தலாவ பகுதியில் பெண்னொருவர் கைக்குழந்தையொன்றுடன் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

தற்கொலை செய்துக் கொண்டுள்ள பெண் யாரென இது வரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த தாயினதும் குழந்தையினதும் சடலங்கள் கண்டி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.