செய்திகள்

குழுவை சந்திக்க மஹிந்தவுக்கு நேரமில்லை; சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது

மஹிந்த – மைத்திரி இணைப்புக் குழுவினர்  இன்று மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் தன்னை அவசரமாக சந்திக்க வேண்டுமென்றில்லையெனவும் வேறு நாளொன்றில் சந்திப்பை நடத்துவோம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ அந்த குழுவுக்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்றைய தினம் அந்த சந்திப்பு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சி செயற்பாட்டாளர்கள் கூட்டத்தின் போது அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றிப் பெற செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒத்துழைப்பும் தேவையென முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய கட்சியை ஒன்றிணைக்கும் வகையிலான தீர்மானத்தை மேற்கொண்டு கட்சியின் முக்கியஸ்தர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா இசுசில் பிரேமஜயந்த இ டிலான்பெரேரா இ டி.பி.ஏக்கநாயக்க இ ஜோன் செனவிரட்ன மற்றும் குமார வெல்கம ஆகியோர் உள்ளடங்களாக 6 பேர் கொண்ட  குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவினர் கடந்த வெள்ளிக் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததை தொடர்ந்து  மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.