செய்திகள்

குவைத் மசூதி மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ஆவேச தாக்குதல் – 13 பேர் உடல் சிதறி பலி

குவைத் நகரின் மையப்பகுதியில் உள்ள ஷியா மசூதிக்குள் இன்று புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய ஆவேச தாக்குதலுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர்., குவைத் நகரில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நஜ்த் மாகாணம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் படை பொறுப்பேற்றுள்ளது. அபு சுலைமான் அல் முவாஹித் என்பவன் இன்றைய தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்டதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பலியாகினர். 25-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.