செய்திகள்

கூகுள் லூன் பலூன் சிகிரியாவில்

இணையத்­தள சேவையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான கூகுள் நிறுவனம் முன்னெடுக்கும் கூகுள் லூன்வேலைத் திட்டத்தின் மற்றுமொரு பலூன் இலங்கை வான்பரப்புக்கு அனுப்புவதற்கான வேலைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிகிரியாவில் நடைபெறும் “யோவுன் புரய” நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பலூன் வானுக்கு அனுப்பபடவுள்ளது.

இந்த செயற்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மலிவான விலையில் இணைய சேவையினை பெற்றுகொள்ள முடியும் என்பதோடு தொலைதொடர்புக் கோபுர உதவியின்றி இணைய வசதியைப் பெறும் உலகின் முதல் நாடாக இலங்கை மாற்றம் பெரும்என்பதும்குறிப்பிடத்தக்கது.

N5