செய்திகள்

கூட்டனியியா ? தனித்தா? இ. தொ. கா முக்கிய கலந்துரையாடல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எந்த கட்சியினூடாக போட்டியிடுவதுஇ எத்தனை வேட்பாளர்களை நிறுத்தவதுஇ தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பது கூட்டனியின் ஊடாகவா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

தொடர்ந்து இக்கலந்துரையாடலில் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்…

மலையக மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதி கல்விஇ சுகாதரம்இ தொழில் வாய்ப்புஇ விளையாட்டு மற்றும் தொழிலாளருக்கான சம்பள உயர்வு உட்பட அனைத்து அபிவிருத்திகளும் பெருமளவில் எம்மால் பெற்றுக்கொடுக்கப்பட்டவையே கடந்த ஆட்சி மாற்றத்தின் காரணமாக மேலும் முன்னெடுக்கப்படவிருந்த அபிவிருத்திகள் இடைநிறுத்தப்பட்டன. இருப்பினும் நுவரெலியாஇ பதுளைஇ கண்டி உட்பட அனைத்து மாகாணங்களிலும் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனி வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் பேச்சுவார்த்தை நடாத்தி நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக எம்மால் முன்னெடுக்கப்பட்டவையாகும்.

ஆகவே மீரியபெத்த மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஆட்சி மாற்றத்தின் காரணமாக இடை நிறுத்தப்பட்டப்போதிலும் புதிய அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் புதிய அமைச்சர்களினால் இம்மக்களுக்காக செய்யப்பட்ட சேவைகள் தான் என்ன? மீரியபெத்தையில் வெறுமனே நான்கு வீடுகள் மாத்திரமே முழுமைப்பெற்றுள்ளன.

புதிய அமைச்சர்களினால் அடிக்கல் நாட்டுவதும்இ முன்னைய அரசாங்கத்தினால் நிர்மானிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்துவைப்பதும்இ பலவந்தப்படுத்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொள்வது மாத்திரமே இவர்களால் செய்யப்பட்ட சேவைகளாகும். மேலும் எமது மலையக சமூகம் ஏமாற்றப்படாமல் இருக்கவும் எமது அடுத்த சமூதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக இணைந்து செயற்படுமாறும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம்இ இ.தொ.காவின் உப தலைவா்கள்இ மாகாண சபை உறுப்பினர்கள்இ அமைப்பாளர்கள் உள்ளிட்ட இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

DSC_0077 DSC_0079