செய்திகள்

கூட்டமைப்பின் பொதுமக்கள் தொடர்பகம் ‘விடுதலை இல்லம்’ மட்டக்களப்பில் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுமக்கள் தொடர்பகமானது கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களின் ஏற்பாட்டில் விடுதலை இல்லம் எனும் பெயரில் இல.7,ஒலிவ் லேன்,மட்டக்களப்பு எனும் விலாசத்தில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் அரசியல் அலுவலகமாகவும் செயற்படவிருக்கின்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டு பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தனர். அத்துடன் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் அலுவலகத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

IMG_4204 IMG_4212 IMG_4218 IMG_4227 IMG_4243

Ariyaneththiran