செய்திகள்

கூட்டமைப்புடன் இணையுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்ணனிக்கு சுமந்திரன் அழைப்பு

தமிழ் மக்களின் ஒரே சக்தியாக விளங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வந்து இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனிக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஏ.சுமந்திரன்.

யாழ் நல்லூரிலுள்ள விடுதியொன்றில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றது. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியும் ஏற்றுக் கொண்டு கூட்டமைப்போடு இணைவதற்கு முன்வர வேண்டும்.

நாம் ஒன்றிணைவதன் மூலம் எம்முடைய பலம் மேலும் அதிகரித்து சர்வதேச ரீதியில் எமது பிரச்சனையை கையாள முடியும். நாம் பிரிந்திருந்தால் அப் பிரிவைப்பயன்படுத்தி வேறு சிலர் அரசியலில் இலாபம் ஈட்டக் கூடும். ஆகவே மீண்டும் இனணந்து செயற்படுங்கள் என்றார்.