செய்திகள்

கூட்டமைப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை: இன்றும் முடிவின்றி ஒத்திவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் இணைந்து இயங்குவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான முன்வரைபை இறுதிசெய்வது குறித்து தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கமுடியும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்று திட்ட முன்வரைபை இறுதிசெய்யவது குறித்த முடிவை எடுப்பர் என்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மாவை சேனாதிராஜா வெளிநாடு சென்றிருந்த நிலையிலேயே நேற்றைய கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

மாவை சேனாதிராஜா நாடு திரும்பிய நிலையில் இன்று புதன்கிழமை கட்சித்தலைவர்கள் கூடி புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து ஆராய்ந்தனர். இதன்போதே தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சோதிராஜா, தன்னுடைய கட்சி உறுப்பினர்களுடன் ஆராயந்த பின்னரே தன்னால் இது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் என அறிவித்தார். இதனையடுத்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.