செய்திகள்

கூட்டுஒப்பந்த பேச்சுவார்தை பிற்போடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் வேதன உயர்வினை பெற்றுக் கொடுக்கும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இருமுறை ஊதிய உயர்வு மக்களின் அடிப்படை விடயங்கள் மற்றும் நாளாந்த பிரச்சினைகள் பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைகள்  இன்று நடைப்பெற்றது.

பேச்சுவார்த்தையின் பிரதானமாக உற்பத்தியூடனான சம்பள உயர்வு பற்றிய புதியதொரு திட்டத்தை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்தார்கள்.  உடனடியாகவே அதனை மறுத்து இ.தொ.காவின் தீர்மானத்தின்படி நியாயமான மற்றும் உயர்வான சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததோடு இச்சம்பள பேச்சுவார்த்தை சாதகமான முடிவிற்கு பின்னர் புதிய திட்டத்தை பற்றி எதிர்காலத்தில் சிந்திப்பதாகவும் இ.தொ.கா கூறியுள்ளது.

இ.தொ.காவின் தீர்மானத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில்  அவர்கள் நிர்வாக குழுக்களுடன் பேசி சரியான ஓரு முடிவை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

கூட்டுஒப்பந்த பேச்சுவார்தை எதிர்வரும் ஜுலை 2ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது. அத்தினத்தில் சாதகமான முடிவு கிட்டும் என்பதை இ.தொ.கா எதிர்பார்க்கின்றது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

DSC_0048 DSC_0059